/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் 267 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : ஆக 23, 2024 05:47 AM

தேனி: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அலுவலங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 'காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
பிறத்துறை பணிகள் திணிப்தை தவிர்க்க வேண்டும். ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,' உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இருநாள் தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒன்றிய அலுவலகங்கள் போதிய அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் தற்போது 395 அலுவலர்கள் தற்போது பணியில் உள்ளனர்.
இவர்களில் 267 போராட்டத்தில் பங்கேற்று 'ஆப்சென்ட்' ஆகினர். மருத்து விடுப்பில் 19 பேர் சென்றிருந்தனர், 109 பேர் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அலுவலங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.