/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி சாதனை
/
தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி சாதனை
தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி சாதனை
தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 12, 2024 04:05 AM

உத்தமபாளையம்: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியும், அதிக மதிப்பெண்கள் பெற்று உத்தமபாளையம் எஸ்.ஏ.பி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேர்களும், 450 க்கு மேல் 16 பேர் பெற்று சாதனை படைத்தனர்.
10 ம் வகுப்பு பொது தேர்வில் ஜீவிதா 500க்கு 492, தர்னீஷ் 492, சரவணக்குமார் 483, தேமொதி பால் 491 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி என்ற சாதனை படைத்தனர். 490 க்கு மேல் 4 பேர், 480 க்கு மேல் 11பேர், 450க்கு மேல் 23 பேர் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனைபடைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் எஸ். கண்ணன், செயலர் ஆர்.முருகன், முதல்வர் ஜியாவுல் ஹக் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.