/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சீர்கேடு
/
தேனி நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சீர்கேடு
தேனி நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சீர்கேடு
தேனி நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 28, 2024 12:08 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் துாய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார பணிகள் தொய்வடைந்து உள்ளன. இதனால் நகரில் பல இடங்கள் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.
தேனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதார பணிக்காக தினமும் 140 ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 100க்கும் குறைவான பணியாளர்களே பணியில் உள்ளனர். தினமும் 30 டன் குப்பைகள் சேகாரமாகிறது. இதில் மக்கும் குப்பை உரமாகவும், மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பபடுகிறது.
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் பல பகுதிகளில் வீடுகளில் குப்பை சேகரிப்பதில் தொய்வு உள்ளது. ஜவஹர் 2வது குறுக்குத்தெரு, கோட்டைகளம் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் குப்பையை தெருவில் வீசுகின்றனர். சமூக விரோதிகள் சிலர் இரவில் குப்பைகளுக்கு தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் அவதி அடைகின்றனர். நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்கள் தினமும் 20 பேர் வரை விடுப்பில் செல்கின்றனர். இதனால் துாய்மை பணியில் தேக்கம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் வீடுகளில் குப்பையை பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க உள்ளோம் என்றனர்.