/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கும் கண்மாயில் சுகாதாரக்கேடு: அழியும் பறவை இனங்கள்
/
பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கும் கண்மாயில் சுகாதாரக்கேடு: அழியும் பறவை இனங்கள்
பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கும் கண்மாயில் சுகாதாரக்கேடு: அழியும் பறவை இனங்கள்
பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கும் கண்மாயில் சுகாதாரக்கேடு: அழியும் பறவை இனங்கள்
ADDED : மே 08, 2024 04:56 AM

போடி : போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கத்தால் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுவதோடு, நாடி வரும் பறவையினங்கள், மீன் குஞ்சுகளும் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இக்கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் தண்ணீர் தேங்குவதால் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, பத்திரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்வதுடன், 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
கண்மாய் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் பார்கள் மூலம் பிளாஸ்டிக் டம்ளர், பாலிதீன் பைகளை கொட்டுவதால் மீனாட்சியம்மன் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளாக சேர்கின்றன. நீர்வரத்து வாய்க்காலின் இருபுறமும் திறந்த வெளி சுகாதார வளாகமாக பயன்படுத்தப்படுகின்றன. கால்நடை கழிவுகளை கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
கொசு தொல்லை அதிகரித்து மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. தேங்கியுள்ள கழிவு நீரை பருகும் பறவைகள், மீன் குஞ்சுகள் பலியாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
ஆண்டு தோறும் அக்., நவ., டிச., ஜனவரியில் பாம்புதாரா, மஞ்சள் மூக்கு நாரை, பிளமிங்கோ போன்ற வெளிநாட்டு பறவைகள் இங்கிருந்த மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வந்தன. பறவை இனங்களை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். கண்மாய்க்கு வரும் உயிரினங்களை காப்பாற்றவும், சுகாதாரகேடு ஏற்படாத வகையில் கண்மாயில் மலை போல தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

