ADDED : மார் 03, 2025 06:29 AM
நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்
உத்தமபாளையம் : சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி நுாற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. கள்ளர் பள்ளிகள் உதவி தொடக்க அலுவலர் சாந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் நாகஜோதி, பாமாராணி தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகாயராஜ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சடையம்மாள் வரவேற்றார். நுாற்றாண்டை கடக்கும் இந்த பள்ளியில் படித்து, தற்போது பணியில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேச தலைவர்கள் போன்று வேடமணிந்து வந்து மாணவ மாணவிகள் மாறுவேட போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் எம்.பி. பார்த்திபன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஆசிரிய பயிற்றுனர் பாக்கிய ஜெயத்தி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சரஸ்வதி, சோங்கம்மாள், சத்துணவு பணியாளர் பிச்சை மணி ஆகியோர் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியை அமர ஜோதி நன்றி கூறினார். கிராம பொதுமக்கள் சார்பில் தலைமை ஆசிரியையை பாராட்டி தங்க மோதிரம் பரிசாக வழங்கி, பாராட்டினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
அரசு கள்ளர் பள்ளியில் விழா
தேனி : நாகைய கவுண்டன்பட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆசிரிய பயிற்றுனர் அருணா தலைமை வகித்தார். முன்னாள் மாணவரும் ஒய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி நுாற்றாண்டு பெயர் பலகை திறந்து வைத்தார். சமுதாய தலைவர் ஜெயராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழா நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் காமாட்சி, சிவக்குமார், ஜெயமுருகன், கணேசன், சிங்கராஜ், குட்டியம்பாள், ஆனந்தி, பொன்மலர், ஷீலா, ஜெயக்குமார், சிஷேர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் சுந்தர் எழுதிய 'நட்சத்திர குழந்தை' என்ற நுாலை எழுத்தாளர் மானசீகன் வெளியிட்டார். படைப்பாளர்கள் சிவாஜி, கூடல் தாரிக், ராஜிலாரிஸ்வான், ஜெயச்சந்திரன், ஓவியர் பாண்டி, அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் ஸ்ரீ ராமன், திலீபன், செந்தில், லெனின், மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளை ஆசிரியர் சுந்தர் ஒருங்கிணைத்திருந்தார்.