ADDED : மார் 25, 2024 05:26 AM
சர்வதேச வன தினம் கொண்டாட்டம்
தேனி:கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் உலக வனநாள் தினம் கொண்டாடப்பட்டது. தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரை, ஓவிய, ஓட்ட போட்டிகள் நடந்தது. வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லுாரி செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தாமரைகண்ணன், கல்லுாரி முதல்வர் தர்மலிங்கம், தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம், திறன்மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை என்.என்.எஸ்., திட்ட அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கல்லுாரியில் கருத்தரங்கு
தேனி:நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் எம்படட் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். எலக்டரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை பேராசிரியர் வெனிஸ்குமார், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பேசினர். விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் பாண்டிச்செல்வி, நாகவாணி ஆகியோர் எம்படட் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளிட்டவற்றை பற்றி பேசினர். கருத்தரங்கில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் மாதவன், சத்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

