நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே ஆட்டுப்பாறையைச் சேர்ந்தவர் சமையன், இவரது 16 வயது மகள் சமைக்காள் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் வெளியில் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமியின் தாயார் பேச்சியம்மாள் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.