/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிறைவு
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிறைவு
ADDED : செப் 02, 2024 12:16 AM
தேனி : மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புப் பணி நடந்தது. மாவட்டத்தில் உள்ள 325 தொடக்கப் பள்ளிகளில் ஆக., 10, 17 ல் நடந்தது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 105ல் ஆக.,24லிலும், நேற்று முன்தினம் 99 நடுநிலைப் பள்ளிகளிலும் நடந்தது. போடி கிழக்கு ஒன்றிய அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் ஷஜீவனா, முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சி.இ.ஓ., இந்திராணி பங்கேற்றனர்.
இக்குழுக்களில் மாணவர்களின் பெற்றோர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் உட்பட 24 பேர் வரை இடம் பெறுவர். மாவட்டத்தில் உள்ள 529 அரசுபள்ளிகளிலும் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பணி நிறைவு பெற்றது.