ADDED : மார் 10, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி கீழத்தெருவை சேர்ந்த செந்தில் குமார் மகன் ஹரிதேவ் 14. இவர் ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே வசிக்கும் முகேஷூடன் ஆடு மேய்க்கச் சென்று உள்ளார். போடி தேனி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார். அப்போது சென்னை பள்ளி கரனையை சேர்ந்த பத்மநாபன் ஓட்டி வந்த கார், ஹரி தேவ் மீது மோதி விபத்து நடந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த ஹரிதேவ் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
போடி டவுன் போலீசார் கார் டிரைவர் பத்மநாபன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.