/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் நெரிசலில் சிக்கும் பள்ளி வாகனங்கள்
/
கூடலுாரில் நெரிசலில் சிக்கும் பள்ளி வாகனங்கள்
ADDED : ஆக 16, 2024 04:46 AM

கூடலுார்: கூடலுாரில் காலை, மாலையில் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் எல்.எப். ரோடு, மெயின் பஜார், காமாட்சியம்மன் கோயில் தெரு, பெட்ரோல் பங்க் தெரு வழியாக தினமும் காலை, மாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி, இறக்கி செல்ல 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் வருகின்றன. இந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. ரோட்டோரங்களில் நெரிசலை ஏற்படுத்தும் விதமாக ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளி குழந்தைகள் வாகனத்தில் ஏறும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இப் பகுதியில் விபத்து அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் போலீசார் ஆங்காங்கே போக்குவரத்தை முறைப்படுத்தி நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

