ADDED : மார் 01, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி,: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமையில் நடந்தது. 4 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் சுற்றுச் சூழல், ஏ.டி.எம்., இயந்திரம் இயங்கும் விதம், மறுசுழற்சி பொருட்கள் மூலம் செய்த வீடு. அலங்கார தட்டு, மாட்டு வண்டி, மண் பொம்மைகள், பூச்சியின் உடல் அமைப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட படைப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. செயற்கை கொசு விரட்டி, சுத்தமான நீர் பெறும் முறை, நீர் சுழற்சி உள்ளிட்ட செயல் விளக்கங்களை மாணவர்கள் எடுத்துக் கூறினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.