/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
/
முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2024 04:16 AM
கடமலைக்குண்டு, : வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் 39, விவசாயி. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் 40, என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரமேசை, பாண்டியராஜன் அரிவாளால் வெட்டி தாக்கினார்.
படுகாயம் அடைந்த ரமேஷ் ஒரு கண்ணில் பார்வை இழந்தார். இதில் பாண்டியராஜனை கைது செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர். வெளியில் வந்த பாண்டியராஜன் ஊருக்குள் வர பொதுமக்கள் தடை விதித்தனர்.
இருப்பினும் அவ்வப்போது தனது உறவினர்களை பார்க்க வந்து சென்றார். நேற்று முன்தினம் ரமேஷ் உடன் பாண்டியராஜனுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. பாண்டியராஜனின் காரை ரமேஷ் உறவினர்கள் உடைத்து சேதப்படுத்தினர். நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியராஜனை போலீசார் விசாரிக்க வந்திருப்பதாக கதவைத் தட்டி ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் எழுப்பி உள்ளனர்.
வெளியில் வந்த பாண்டியராஜனை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், ராஜ்குமார் 26, சுருளி 50 ஆகியோரை கைது செய்தனர். ஜீவா என்பவரை தேடி வருகின்றனர்.