ADDED : மார் 24, 2024 05:43 AM
தேனி : தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் பழக்கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் 45 கிலோ கெட்டுப்போன பழங்கள், 3 கிலோ பேரிட்சை பறிமுதல் செய்தனர்.
தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு பகுதிகளில் உள்ள 7 பழக்கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் உத்தரவில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஒரு கடையில் 15 கிலோ, மற்றொரு கடையில் 30 கிலோ கெட்டுப்போன பழங்களை பறிமுதல் செய்தனர்.
காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ பேரிட்சையை பறிமுதல் செய்தனர்.
கெட்டுப்போன பழங்கள் வைத்திருந்த கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் தரம் குறைவாக, சுகாதாரமின்றி இருந்தால் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

