/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு கூட்டம்
ADDED : ஆக 04, 2024 06:17 AM
கம்பம் : கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் பட்டத்து ராபியாம்மாள் தலைமை வகித்தார்.
தலைமையாசிரியை மலர்விழி முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நாகஜோதி பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து விளக்கி பேசினார். பள்ளி ஆசிரியைகள் கனிமொழி, நாகரத்தினம் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளை தேர்வு செய்யும் முறைகள் பற்றி விளக்கினார்ூ நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் பணிகள் குறித்து பாராட்டி பேசினார்கள். ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினார். இந்த நிகழச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.