/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டை ஆக்கிரமித்து போடியில் மீன் விற்பனை
/
ரோட்டை ஆக்கிரமித்து போடியில் மீன் விற்பனை
ADDED : மே 01, 2024 08:09 AM
போடி : போடியில் மெயின் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகள் அமைத்தும், வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடியில் காமராஜ் பஜார், பி.ஹைச்., ரோடு, போடி - தேவாரம் மெயின் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பகலில் சரக்கு வாகனங்களை நிறுத்தியும், மாலை 6 மணிக்கு மேல் பொறித்த மீன் கடைகள், பானிபூரி கடைகளை வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்றன. இரவில் டூவீலரில் செல்லும் போது பொறித்த மீன் மீது தூவப்பட்ட மிளகாய் பொடி காற்றில் பறந்து கண்களில் விழுகின்றன. இதனால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் நகராட்சி, போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.