/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுாறு சதவீத தேர்ச்சி பெற்று செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
/
நுாறு சதவீத தேர்ச்சி பெற்று செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
நுாறு சதவீத தேர்ச்சி பெற்று செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
நுாறு சதவீத தேர்ச்சி பெற்று செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
ADDED : மே 16, 2024 06:13 AM

பெரியகுளம்: பிளஸ் 2, 10ம் வகுப்பு, பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியும், அதிக மதிப்பெண்கள் பெற்று பெரியகுளம், டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
டி.கள்ளிப்பட்டியில் உள்ள இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்
மானவ் அனுகிரஹன் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மாணவி ஷாலினி 560 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், பிரியங்கா 554 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி நீத்தா ஸ்ரீ 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தலா 100 மதிப்பெண்கள் பெற்றனர். மாணவிகள் ஜனனி, கார்த்திகா அனுகாசினி தலா 494 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்தனர். ஜனனி கணிதத்திலும், கார்த்திகா, அனுகாஷினி அறிவியலிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
அசன் பாத்திமா 492 மதிப்பெண்கள் பெற்று 3 ம் இடம் பெற்றனர். அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார். இப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்தார்.
பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவி விஜயா 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றார்.
இவர் பொருளாதாரம், வணிகவியல் பாடத்தில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவர் முரளி கார்த்திக் 581 மதிப்பெண்கள் பெற்று 2 ம் இடத்தை பெற்றார். இவர் பொருளாதாரம், வணிகவியல், கணினி பயன்பாடு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி ஹரிணி 577 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பெற்றார். இவர் வணிகவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றார்.
நூறு சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு எழுதிய 105 மாணவர்களும், பிளஸ் 1 தேர்வு எழுதிய 83 மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 85 மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் நூறு சதவீத தேர்ச்சி அடைந்தனர்.
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் எட்வின் நேசஸ் பரிசுகள் வழங்கி பாராட்டினர். துணை முதல்வர் வீரன், பொருளாளர் கில்பர்ட் உடனிருந்தனர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.