/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சக்தி காளீஸ்வரி கோயில் வைகாசி உற்ஸவ விழா
/
சக்தி காளீஸ்வரி கோயில் வைகாசி உற்ஸவ விழா
ADDED : ஜூன் 08, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வள்ளிநகரில் சக்தி காளீஸ்வரி கருப்பணசாமி கோயில் உற்ஸவ விழா நேற்று துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு பெத்தாட்சி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து, தேனி பெரியகுளம் ரோடு, தீயணைப்பு நிலையம் வழியாக வள்ளிநகரில் உள்ள கோயிலை அடைந்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சந்தை மாரியம்மன் கோயிலில் கரகம் அலங்காரம் செய்து, ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
இன்று தீச்சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுத்து அம்மனுக்கு பூஜையும், நாளை முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவு பெற உள்ளது. உற்ஸவ ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.