/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருத்தடை ஆப்பரேஷன் செய்ய மயக்கவியல் டாக்டர் பற்றாக்குறை
/
கருத்தடை ஆப்பரேஷன் செய்ய மயக்கவியல் டாக்டர் பற்றாக்குறை
கருத்தடை ஆப்பரேஷன் செய்ய மயக்கவியல் டாக்டர் பற்றாக்குறை
கருத்தடை ஆப்பரேஷன் செய்ய மயக்கவியல் டாக்டர் பற்றாக்குறை
ADDED : செப் 10, 2024 05:59 AM
கம்பம்: மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே ஒரு மயக்கவியல் டாக்டர் இருப்பதால் கருத்தடை ஆப்பரேஷன்செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் குடும்ப நலத்துறை மூலம் குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடை சாதனங்கள் பொருத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.தேனி மாவட்ட குடும்ப நலத்துறை கடந்தாண்டு சிறப்பு முகாம்கள் மூலம் ஆண்களுக்கான கருத்தடை ஆப்பரேஷன் சாதனையை பாராட்டி டாடா மெமோரியல் பவுண்டேசன் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார்கள்.
ஆனால் இந்தாண்டு சிறப்பு முகாம் நடத்துவதில் சுணக்கம் உள்ளது. ஆகஸ்ட், செப்., ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் மாதம் ஒன்று வீதம் முகாம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, கடமலை மயிலை ஆகிய எட்டு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் கருத்தடை ஆப்பரேஷன்கள் நடைபெறுகிறது. இந்த எட்டு வட்டாரங்களில் உள்ள ஆப்பரேஷன் தியேட்டர்களுக்கும் ஒரே ஒரு மயக்கவியல் டாக்டர் மட்டும் உள்ளார். அவர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒராண்டு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையில் பணியாற்றி வருகிறார். விரைவில் அவரும் பணியிலிருந்து சென்று விடுவார். இவரை தவிர்த்து தற்போது மயக்கவியல் டாக்டர் ஒருவரை நியமித்துள்ளனர்.
ஆனால் என்.எஸ்.வி., மற்றும் வாசக்டமி ஆப்பரேஷன்கள் செய்வதற்கு ஒருவர் மட்டுமே போதாது.
மாதம் குறைந்தது 64 ஆப்பரேஷன்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்து வருகிறது. நிலைமையை சமாளிக்க கூடுதல் மயக்கவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
இது தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறுகையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் ஊசி செலுத்துவதற்கான 6 மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது.
அந்த பயிற்சியை தேனி மருத்துவக் கல்லூரியில் வழங்கினால் இப் பயிற்சியில் சேர பல டாக்டர்கள் தயாராக உள்ளனர்.
எனவே தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்க மருந்து ஊசி செலுத்தும் பயிற்சியை துவக்கினால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர்.
மயக்கவியல் டாக்டர் பற்றாக்குறை போக்க குடும்ப நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.