sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாரம் ஒருமுறை வினியோகத்தால் குடிநீர் தட்டுப்பாடு: சருத்துப்பட்டி ஊராட்சியில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிட ம்

/

வாரம் ஒருமுறை வினியோகத்தால் குடிநீர் தட்டுப்பாடு: சருத்துப்பட்டி ஊராட்சியில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிட ம்

வாரம் ஒருமுறை வினியோகத்தால் குடிநீர் தட்டுப்பாடு: சருத்துப்பட்டி ஊராட்சியில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிட ம்

வாரம் ஒருமுறை வினியோகத்தால் குடிநீர் தட்டுப்பாடு: சருத்துப்பட்டி ஊராட்சியில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிட ம்


ADDED : ஏப் 23, 2024 06:44 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: சருத்துபட்டி ஊராட்சி யில் வாரம் ஒரு முறை வழங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. முடங்கியுள்ள குடிநீர்ஆதாரங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விவசாயக் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். கால்நடை வளர்ப்பு தொழில் அதிகம் நடக்கிறது.

சருத்துப்பட்டி ஊராட்சிக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 6 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் குறைந்த அளவாக 1.5 லட்சம் லிட்டர் மட்டும் வழங்கப்படுகிறது.

கைலாசபட்டி பாப்பிபட்டி கண்மாய் அருகே சருத்துப்பட்டி பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் கிணறு வெட்டி குடிநீர் வழங்கும் திட்டம் கிணறு பராமரிப்பு இல்லாததால் திட்டம் முடங்கியுள்ளது.

குன்னூர் ஆற்றில் உறை கிணறு அமைத்து குழாய் மூலம் சருத்துப்பட்டி பெருமாள் கோயில் தெரு அருகே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு குடிநீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில் நீரை பின் அங்கிருந்து மின் மோட்டார் மூலம் ஆறு மேல்நிலைதொட்டிகளுக்கு ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இத் திட்டம் முறையாக செயல்பட்ட போது குடிநீர் தட்டுப்பாடு இல்லை. கடந்த சில மாதங்களாக தரை மட்ட தொட்டியில் இருந்த 3 மின்மோட்டார்களும் பழுதானதால் தொட்டி பயன்பாடின்றி உள்ளது.

நேரிடையாக இரு மேல்நிலை தொட்டிகளில் மட்டும் குடிநீர் ஏற்றிவினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகஉள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு


அன்பு, சருத்துப்பட்டி: சருத்துப்பட்டியில் 7 நாட்களுக்கு ஒரு நாள் மட்டுமே உவர்ப்பு நீராக வினியோகிக்கப்படுகிறது.

இதனால் தினமும் பெரியகுளத்திலிருந்து குடிநீர் கொண்டு வரும் நிலை உள்ளது. கோடை துவங்குவதற்கு முன்பே குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பெரியகுளம் ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து குன்னூர் குடிநீர் திட்டம் உட்பட அனைத்து குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் சுகாதார வளாகத்தில் காலை 6:00 மணிக்கு திறந்து காலை 9:00 மணிக்கு பூட்டி விட்டு செல்கின்றனர். இதனால் பெண்கள் ரோட்டோரத்தை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே காலை 6:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் சுகாதார வளாகம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளும் பாதிப்பு


அழகுமீனா, சருத்துப்பட்டி:வீடுகளில் மாடுகள் வளர்ப்பது அதிக அளவில் உள்ளது. இங்கு நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினால் மாடுகளுக்கு கூட தண்ணீர் கொடுப்பதற்கு சிரமமாக உள்ளது. விரைவில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ஊராட்சி நிர்வாகம் குறைந்து

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ ண்கள் சுகாதாரவளாகம் திறக்க வேண்டும்


முருகன், சருத்துபட்டி:மாதலப்பன் பாறை ரோட்டில் ரூ 5.25 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் ரோட்டோரம் பயன்படுத்தி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தீர்வு காணப்படும்


தலைவர்: சாந்தி, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பணி நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us