/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எஸ்.ஐ., கன்னத்தில் இன்ஸ்பெக்டர் 'பளார்'
/
எஸ்.ஐ., கன்னத்தில் இன்ஸ்பெக்டர் 'பளார்'
ADDED : செப் 18, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு:தேனிமாவட்டம் கண்டமனுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக கண்ணன் உள்ளார். இதே ஸ்டேஷனில் உள்ள எஸ்.ஐ.,மலைச்சாமிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் வழக்கு தொடர்பான விசாரணையில் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் எஸ்.ஐ., கன்னத்தில் 'பளார்' என அறைந்துள்ளர். சம்பவம் குறித்து தேனி எஸ்.பி., சிவப்பிரசாத் விசாரிக்கிறார்.

