ADDED : ஜூன் 19, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பெரியகுளம் தென்கரை புனித சேவியர் தெரு ரெஜினா 53. இவர் வாழையாத்துப்பட்டியில் தங்கல் வேலைக்கு ஜூன் 10ல் சென்றார். இந்நிலையில் ஜூன் 15 காலை 11:00 மணிக்கு ரெஜினாவின் மருமகள் விஜியும், அவரது சகோதரி மகன் யுவன்ராஜூம் மாமியார் வீட்டில் உள்ள ஆம்பியரை எடுப்பதற்காக சென்றனர். அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ரெஜினாவிற்கு அலைபேசியில் தகவல் அளித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது வீட்டிற்குள் பீரோவில் இருந்த ரூ.1.95 லட்சம் மதிப்புள்ள ஆறரை பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச சென்றது தெரியவந்தது. தென்கரை போலீஸ் எஸ்.ஐ., அழகுராஜா வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.