/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடிய ஆறு பேர் கைது கிணற்றில் இருந்து சிலைகளை மீட்ட போலீசார்

ADDED : மே 06, 2024 12:44 AM

தேனி : தேனி அருகே கோடாங்கிபட்டி பண்ணை வீட்டில் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான உலோக சிலைகள், ஏ.சி., உள்ளிட்டவற்றை திருடி சென்றஅதேப்பகுதி ரமேஷ் 45, சங்கர் 45, அருண்பாண்டி 30, சிலம்பரசன் 35, ஆனந்த் 34, ஜெகதீசன் 30, ஆகிய 6 பேரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது, கிணற்றில் ஒழித்து வைக்கப்பட்ட சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டன.
மதுரை நேதாஜி மெயின்ரோடு சோமசுந்தரம். இவரது மனைவி தேன்பழம். இவர்கள் வாகன டயர் விற்பனை கடை வைத்துள்ளனர். இவர்களது மகன் பாலாஜிக்கு தேனி அருகே கோடாங்கிபட்டியில் பண்ணையில் வீடு கட்டி கொடுத்தனர். வீடு 6 மாதங்களாக பூட்டியிருந்தது. வீட்டிற்கு தேன்பழம் சென்று பார்த்தபோது வீட்டின் உள்பகுதியில் கதவு உடைக்கப்பட்டு ரூ.5.18 லட்சம் மதிப்பிலான கண்ணன் - ராதை சிலைகள், தங்க முலாம் பூசிய விநாயகர் சிலை, லட்சுமி - சிலை, அலங்கார மீன் ஸ்டாண்ட், பிரீஷர் பாக்ஸ், ஏ.சி., உள்ளிட்டவை திருடு போயிருந்தன. இது தொடர்பாக தேன்பழம், போலீசில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., பார்த்திபன் உத்தரவில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன்,எஸ்.எஸ்.ஐ.,கள் நாகராஜன், மணிமாறன் தலைமையிலான சிறப்புக்குழு விசாரணை நடத்தினர். சிலைகள், அலங்கார ஸ்டாண்ட் உள்ளிட்டவற்றை திருடிய கோடாங்கிபட்டி ரமேஷ், சங்கர், அருண்பாண்டி, சிலம்பரசன், ஆனந்த், ஜெகதீசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் கொடுத்த தகவலில் கோடாங்கிபட்டியில் கிணற்றில் மறைத்து வைத்திருந்த சிலைகள் மீட்கப்பட்டன. தலைமறைவாகி உள்ள மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.