/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருநாய்கள் கடித்து ஆறு பேர் காயம்
/
தெருநாய்கள் கடித்து ஆறு பேர் காயம்
ADDED : ஆக 31, 2024 06:34 AM
கம்பம் : கம்பத்தில் தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயமடைந்ததால் பொது மக்கள் மத்தியில் பயம் தொற்றிக் கொண்டது.
தேனி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க் கடியால் பாதிக்கப்படுவோரும் தினமும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கருத்தடை செய்யும் பணிகள் மேற்கொள்ள போவதாக அறிவித்த நகராட்சிகளும் அந்த பணியை செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பம் குரங்குமாயன் தெரு, பள்ளிவாசல் தெரு, பஜார் தெரு, காந்திஜி வீதி ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் ரினா 36, மதிவண்ணன் 53, முருகன் 56, ரம்ஜான் 39, விஜயலட்சுமி 65, சிவதர்சன் 5 உள்ளிட்ட பலரை கடித்துள்ளது. சிறுவன் சிவதர்சனுக்கு அதிக காயங்கள் இருந்ததால் உள்நோயாளியாக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.