/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண்டை ஓடு கண்டுபிடிப்பு: காணாமல் போன பெண்கள் விபரம் சேகரிப்பு
/
மண்டை ஓடு கண்டுபிடிப்பு: காணாமல் போன பெண்கள் விபரம் சேகரிப்பு
மண்டை ஓடு கண்டுபிடிப்பு: காணாமல் போன பெண்கள் விபரம் சேகரிப்பு
மண்டை ஓடு கண்டுபிடிப்பு: காணாமல் போன பெண்கள் விபரம் சேகரிப்பு
ADDED : செப் 15, 2024 12:20 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த பெண் மண்டை ஓடு டி.என்.ஏ., பரிசோதனை முடிந்ததால் காணாமல் போன பெண்கள் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ஒத்தவீடு காட்டுப் பகுதியில் ஆக. 29 ல் பெண்ணின் மண்டை ஓடு கண்டறியப்பட்டது. அதில் சிறிய எலும்பு துண்டுகள், சேலை, பெண்கள் அணியும் ஒரு ஜோடி செருப்பு, பித்தளை செயின் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் கொலையா, தற்கொலையா, கற்பழித்து கொலையா என தேவதானப்பட்டிபோலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டை ஓடு டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவு கிடைத்துள்ள நிலையில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை, மாநிலம் முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்கள் பெயர்கள் விபரம் சேகரித்து வருகிறார்.
காணாமல் போனவர்களின் விபரத்துடன் வருபவர்களிடம் டி.என்.ஏ., பரிசோதனை செய்து பெண் பற்றிய விபரம் சேகரிக்க உள்ளனர்.