/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனவிலங்குகளை தடுக்க சோலார் மின்வேலி
/
வனவிலங்குகளை தடுக்க சோலார் மின்வேலி
ADDED : ஏப் 18, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் அருகே வனப்பகுதியை ஒட்டி லோயர்கேம்ப், வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுத்தி வந்தது.
மேலும் பளியன்குடியில் காட்டு யானைகளால் பழங்குடியின மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினரிடம்மின்வேலி அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் பளியன்குடி வனப்பகுதியை ஒட்டி அகழி ஆழப்படுத்தி சோலார் மின்வேலி வனத்துறை மூலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

