/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் உரிமைத்தொகை பிரச்னைக்கு தீர்வு: புதிய யுக்தியை பின்பற்றும் தி.மு.க.,

ADDED : ஏப் 11, 2024 06:27 AM
கம்பம் : தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் மகளிர் உரிமை தொகை பிரச்னை எதிரொலிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண புதிய யுக்தி ஒன்றை தி.மு.க. பின்பற்ற துவங்கி உள்ளது.
தேனி லோக்சபா தொகுதி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது.
வேட்பாளர்களின் பிரசாரத்தில் ஒவ்வொருவரும் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். தி.மு.க. வேட்பாளருக்கு அரசின் மகளிர் உரிமை திட்டம் பெரிய தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் வேட்பாளர் பிரசாரம் செய்ய செல்லும் போது, எனக்கு கிடைக்கல, உனக்கு கிடைக்கல என்ற கூச்சல் எழுந்து வருகிறது.
இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று யோசித்த தி.மு.க. வினர் தற்போது புதிய யுக்தியை பின்பற்ற துவங்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஊரிலும் வார்டு செயலாளர்கள் வார்டுகளில் மகளிர் உரிமை தொகை வாங்காத பெண்களிடமிருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.
தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு உரிமை தொகை உறுதியாக கிடைக்கும் என்று கூறி, ஓட்டுக்களை வாங்க காய் நகர்த்தி வருகின்றனர்.
பெண்களும் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை தி.மு.க.,வினரிடம் கொடுத்து வருகின்றனர் தி.மு.க.,வினரின் இந்த யுக்தி மகளிர் உரிமை தொகை பிரச்னையில் இருந்து தி.மு.க.,விற்கு தற்காலிக தீர்வை தரும் என்கின்றனர்.