/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருமகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் பலி
/
மருமகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் பலி
ADDED : ஜூன் 22, 2024 05:41 AM
மூணாறு: இடுக்கி மாவட்டம் செருதோணி பைனாவ் அருகே 56 காலனியில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மாமியார் அன்னக்குட்டி 62, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அன்னக்குட்டியின் மகள் பிரின்சியை கஞ்சிகுழியைச் சேர்ந்த சந்தோஷ் 46, யைஇரண்டாவதாக திருமணம் செய்தார். தற்போது இத்தாலி நாட்டில் பிரின்சி நர்ஸ்சாக பணியாற்றுகிறார். சந்தோஷின் விருப்பதற்கு மாறாக பிரின்சி வெளிநாடு சென்றதால் மாமியாருடன் அடிக்கடி தகராறு செய்தார்.
இந்நிலையில் அன்னக்குட்டி, அவரது மகன் லின்சியின் இரண்டரை வயது மகள் லியா ஆகியோரை ஜூன் 5ல் சந்தோஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். பலத்த தீக்காயங்களுடன் இருவரும் கோட்டயத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் அன்னக்குட்டி சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
சம்பவத்திற்கு பின் தலைமறைவான சாந்தோஷை முந்தல் செக் போஸ்ட் போலீசாரின் உதவியுடன் இடுக்கி டி.எஸ்.பி. ஷாஜி வர்க்கீஸ் தலைமையில் போலீசார் ஜூன் 16ல் கைது செய்தனர்.
அவர் தற்போது விசாரணைக்காக போலீஸ் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.