/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு
/
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு
ADDED : மே 11, 2024 05:32 AM
பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக சோத்துப்பாறை அணையில் கோடை மழை பெய்ததால் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கோடை மழை அதிகபட்சமாக சோத்துப்பாறை அணையில் 125 மி.மீ., பெய்தது. இதனால் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 100.69 அடியாக இருந்தது. (அணையின் மொத்த உயரம் 126.28) மழையால் அணைக்கு வினாடிக்கு 4 கன அடி வரும் நிலையில் அணை நீர்மட்டம் ஒரே நாளில் நேற்று பிற்பகல் 2 அடி உயர்ந்து 102.69 அடியாக உயர்ந்தது. பெரியகுளம் பகுதி குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிக்கு வருவதால் இன்று அணை நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.