/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே நாளில் பத்தரை அடி உயர்ந்து மறுகால் பாயும் சோத்துப்பாறை அணை
/
ஒரே நாளில் பத்தரை அடி உயர்ந்து மறுகால் பாயும் சோத்துப்பாறை அணை
ஒரே நாளில் பத்தரை அடி உயர்ந்து மறுகால் பாயும் சோத்துப்பாறை அணை
ஒரே நாளில் பத்தரை அடி உயர்ந்து மறுகால் பாயும் சோத்துப்பாறை அணை
ADDED : ஆக 13, 2024 11:46 PM

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை ஒரே நாளில் பத்தரை அடி உயர்ந்து மறுகால் பாய்கிறது.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. 100 மில்லியன் கன அடி. நேற்று முன்தினம் (ஆக. 12 ல் ) மாவட்டத்தில் அதிகபட்சமாக அணை நீர்பிடிப்பு பகுதியில் 86 மி.மீ., மழை பெய்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் 115.78 அடியை எட்டியது. நேற்று அதிகாலை 52 மி.மீ., மழை பெய்ததால் வினாடிக்கு 227.62 கன அடி நீர்வரத்து ஏற்பட்டு ஒரே நாளில் பத்தரை அடி உயர்ந்தது. நேற்று காலையில் அணையின் மொத்த உயரம் 126.28 அடியாக இருந்தது.
வினாடிக்கு 135.74 கன அடி நீர் வராகநதியில் செல்வதால் ஆற்றில் அதிக அளவு நீர் செல்கிறது. இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி நீர் வளத்துறையினர் கேட்டுக்கொண்டனர். அணை நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.