/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அட்சய திருதியை கோயிலில் சிறப்பு பூஜை
/
அட்சய திருதியை கோயிலில் சிறப்பு பூஜை
ADDED : மே 11, 2024 05:26 AM

போடி: அட்சய திருதியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பக்தர்கள் வாங்கி வந்த தங்களது ராசிக்கான பொருட்களை தானமாக வழங்கினர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தாயாரின் சன்னதியில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கி சென்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.
பெரியகுளம்:பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதியில் இரு கரைகளிலும் ஆண், பெண் மருத மரங்களில் குளிப்பது குடும்பத்தில் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று அட்சய திருதியை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வராதநதியில் குளித்து, பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் கோயிலில் பரிவார மூர்த்திகளை வணங்கினர். வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கைலாசபட்டி கைலாசநாதர், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன், பெரியகுளம் கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
14 மணி நேரம் ஹரே ராம கீர்த்தனம் பாடப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். அன்னதானம்வழங்கப்பட்டது.