/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடிக்கார்த்திகை சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு
/
ஆடிக்கார்த்திகை சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆடிக்கார்த்திகை சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆடிக்கார்த்திகை சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 31, 2024 05:42 AM

போடி : போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆடிக் கார்த்திகை விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி அருகே அமைந்துள்ள சண்முகநாதன் கோயிலில் ஆடிக்கார்த்திகை விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதல் சண்முகநாதருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிருதம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயப் பாண்டியன் செய்திருந்தார். அபிஷேகம் மற்றும் ஆராதனைளை கோயில் அர்ச்சகர் கணபதி, முத்து ஆகியோர் செய்திருந்தனர்.
யாக பூஜை; உலக நன்மை வேண்டி போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பட்டு நூலால் மாலை செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு பவித்ரோஸ்தவம் யாக பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
சிறப்பு பூஜைகளை கார்த்திக் பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.