ADDED : ஜூன் 01, 2024 05:26 AM
தேனி: அல்லிநகரம் கம்பர் தெரு அர்ஜூன் மகன்கள் தீபக், வினோத்குமார். இவர்களுக்கும், அதேப்பகுதி இளங்கோ தெரு தினேஷ்குமார் தரப்பினருக்கும் குடும்ப பிரச்னையால் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததார் தினேஷ்குமார். அங்கு சென்ற தீபக், வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வரும் தினேஷ்குமாரிடம் தகராறு செய்தனர், பின் தினேஷ்குமாரின் சகோதரர் ரஞ்சித்குமாரை தாக்கினர். தினேஷ்குமாருக்கு கத்தி குத்து விழுந்தது. காயமடைந்த தினேஷ்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவரது தாயார் லதா புகாரில் தீபக், அவரது சகோதரர் வினோத்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வர் மீது அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து தீபக்கை கைது செய்ததார். அவரது சித்தப்பா பரமசிவத்தை நேற்று கைது செய்து விசாரிக்கிறார்.