/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி
/
பள்ளியில் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி
ADDED : ஜூலை 06, 2024 05:58 AM

தேனி : தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, கருத்தரங்கு, வினாடி வினா போட்டி நடந்தது.
நிகழ்ச்சியில் தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் துவக்கி வைத்தார். கோட்ட துணை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், பள்ளி முதல்வர் செல்வி முன்னிலை வகித்தனர். காலை முதல் மதியம் வரை நடந்த தபால் தலை கண்காட்சியில் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த 1000 தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு குறிப்பு எடுத்தனர். வினாடி வினா நிகழ்வில் எட்டாம் வகுப்பு மாணவி தேவகி, மாணவர் குருசந்தர் முதல் பரிசு வென்றனர்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர் லிங்கேஷ், எர்வின் ஜோஸ்வா 2ம் பரிசு வென்றனர். ஆறாம் வகுப்பு மாணவி சிவானி, தனிஷ்கா மூன்றாம் பரிசு பெற்றனர்.
தபால்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் வெற்றி பெற்ற ஏழாம் வகுப்பு மாணவர் தர்வினேஷ் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை பெற்று வருகிறார். அவரை கோட்ட கண்காணிப்பாளர் பாராட்டி கவுரவித்தார்.
தேனி கோட்ட வணிகப்பிரிவு அலுவலர் செல்வக்குமார், வேலம்மாள் பள்ளி நுாலக ஆசிரியர் குபேந்திரன பங்கேற்றனர்.
கண்காணிப்பாளரின் நேரடி உதவியாளர் பரமசிவம்,காப்பீட்டுப் பிரிவு அலுவலர் நாகராஜ் வினாடிவினா நிகழ்வையும் ஒருங்கிணைத்திருந்தனர்.