/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில 'அட்யா பட்யா' போட்டி தேனி அணி முதலிடம்
/
மாநில 'அட்யா பட்யா' போட்டி தேனி அணி முதலிடம்
ADDED : ஆக 06, 2024 05:28 AM
தேனி: மாநில அளவிலான 'அட்யா பட்யா' போட்டி திருவள்ளூர் மாவட்டம் புட்லுார் சின்னிசெட்டி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாணவர்கள், மாணவிகள் பிரிவில் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேனி மாவட்ட அட்யா பட்யா கழக அணி முதல் பரிசு வென்றது.
அணியில் மாணவர்கள் ஹரி பிரசாத், கிருத்திக்குமார், சுதர்சன், மனோஜ்குமார், தமிழ்வாணன், ஹரிஷ், வருண்பிரசாத், தீனதயாளன், துர்கேஷ், ரேவனத் ஹயக்ரீவன், முத்துமாணிக்கம், ஹேமந்த் காஞ்சி இடம் பெற்றிருந்தனர்.
வெற்றி பெற்றவர்களை மாநில அட்யா பட்யா கழக பொது செயலாளர் சிவசுப்பிரமணியன், தலைவர் பாலாஜி, பொருளாளர் ஆதவன், தேனி மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பயிற்சியாளர்கள் ஸ்ரீதர்ஷினி, லட்சுமிபிரபா, சரண், பிரகாஷ், நிர்வாகிகள் தனலட்சுமி, பாண்டிசெல்வி உள்ளிட்டோர் பாராட்டினர்.