ADDED : செப் 01, 2024 06:05 AM
பெரியகுளம், : விளையாடுவதினால் உடல் திறன், மனம் பக்குவமடைகிறது என கோகோ மாநில போட்டியை துவக்கி வைத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் பேசினார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி அம்மாள் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில, மாவட்ட கோகோ கழகம், லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா சார்பில் மாநிலபெண்கள் கோகோ விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் விளையாடுகின்றன.
கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப் தலைமை வகித்தார். கோகோ விளையாட்டு கழக தலைவர் டாக்டர் முத்துகுகன், இணைச்செயலாளர் நெல்சன் சாமுவேல் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் ஐஸ்வர்யா வரவேற்றார். பள்ளி முதல்வர் பாரதரத்னம், கோகோ நடுவர் குழு தலைவர் விமலேஸ்வரன், வழக்கறிஞர் சந்திரசேகரன், குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை தலைவர் சரவணன் பங்கேற்றனர்.