/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில கோகோ விளையாட்டு போட்டி; அரையிறுதிக்கு ஆறு அணிகள் தகுதி
/
மாநில கோகோ விளையாட்டு போட்டி; அரையிறுதிக்கு ஆறு அணிகள் தகுதி
மாநில கோகோ விளையாட்டு போட்டி; அரையிறுதிக்கு ஆறு அணிகள் தகுதி
மாநில கோகோ விளையாட்டு போட்டி; அரையிறுதிக்கு ஆறு அணிகள் தகுதி
ADDED : செப் 02, 2024 12:08 AM

பெரியகுளம் : மாநில கோகோ விளையாட்டு போட்டியில் முதலிடத்தை பிடிக்க சிவகங்கை, ஈரோடு மாவட்ட வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி அம்மாள் 3 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில, மாவட்ட கோகோ கழகம், லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளி சார்பில் மாநில விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் ரோஸி வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில் சென்னை போலீஸ் அணி, சென்னை, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உட்பட 30 மாவட்டங்களில் இருந்து 350 க்கும் அதிகமான வீராங்கனைகள் விளையாடினர்.
காலிறுதிப் போட்டியை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், கோகோ விளையாட்டு கழக தலைவர் டாக்டர் முத்துகுகன், இணைச் செயலாளர் நெல்சன் சாமுவேல் துவக்கி வைத்தனர்.
காலிறுதிப் போட்டிக்கு தகுதி
தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றன.
அரையிறுதி போட்டிக்கு தகுதி
சிவகங்கை, கோவை, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன. போட்டியை தேனி ஆவின் முன்னாள் தலைவர் ஓ.ராஜா, பள்ளி தாளாளர் ஐஸ்வர்யா, பள்ளி முதல்வர் பாரதரத்னம், குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை தலைவர் சரவணன், கோகோ நடுவர் குழு தலைவர் விமலேஸ்வரன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காமேஷ்வரன் துவக்கி வைத்தனர். அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை, ஈரோடு அணிகள் முதலிடத்தை பிடிக்க மோதினர்.-