/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை பதிலளிக்காத அதிகாரிகளுக்கு ‛'டோஸ்'
/
மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை பதிலளிக்காத அதிகாரிகளுக்கு ‛'டோஸ்'
மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை பதிலளிக்காத அதிகாரிகளுக்கு ‛'டோஸ்'
மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை பதிலளிக்காத அதிகாரிகளுக்கு ‛'டோஸ்'
ADDED : மே 18, 2024 05:04 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் விசாரணை நடத்தினார்..
கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
விசாரணையில் நடந்த விபரங்கள் வருமாறு:
போடி விசுவாசபுரம் கிழக்குத்தெரு கருப்பராஜ் 35. இவர் தங்கள் தெருவில் மின்கம்பம் அமைக்க வலியுறுத்தி ஊராட்சியில் விண்ணப்பித்தார். பி.டி.ஓ., ஆபீஸ்க்கு செல்ல ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகத்திற்கு செல்ல பி.டிஓ., அலுவலகமும் அலைக்கழிப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லாததால் மேல்முறையீட்டு மனு அளித்தார். போடி பி.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் விசாரித்த மாநில ஆணையர், இவர் சுயநலத்திற்காக மின்கம்பம் கோரவில்லை பொது பயன்பாட்டிற்கு கேட்டுள்ளார்' என பி.டி.ஓ.,விடம் கூறி ஒரு மாதத்தில் மின்கம்பம் அமைத்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சீதாராம்தாஸ்நகரில் செல்வவிநாயகர் கோயில் தெரு 1, 2, 3 உள்ளன. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கழிவுநீர்வடிகால் வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் இல்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பேராசிரியை உமாமகேஸ்வரி 18 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாறாக ஊராட்சி நிர்வாகம் அங்கு வசிக்கும் ஆவண எழுத்தர் வசிக்கும் பகுதிக்கு வசதிசெய்து கொடுத்தது. பேராசிரியை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு அளித்தார். பி.டி.ஓ., அலுவலகம் விபரம் வழங்க வில்லை. மேல் முறையீட்டு மனுவில் விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெ., தொகுதியில் இப்படியான அவலம். நீங்கள் கலெக்டர், திட்ட இயக்குனர் யாரிடம் அனுமதி பெறுவீர்களோ எனக்கு தெரியாது. 2 வாரத்தில் கழிவுநீரோடை, தெரு விளக்குகள், குடிநீர் வசதி செய்து கொடுத்து பணி முடித்து ஒப்புகை கையெழுத்து பேராசிரியையிடம் பெற்று, அறிக்கை தாக்கல் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். இதே போல் 45 விண்ணப்பதாரர்களிடம் ஆணையர் விசாரணை நடத்தினார்.

