/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில 'கிக் பாக்சிங் 'போட்டி: 51 பேர் தகுதி
/
மாநில 'கிக் பாக்சிங் 'போட்டி: 51 பேர் தகுதி
ADDED : மே 01, 2024 08:06 AM

ஆண்டிபட்டி : மாநில அளவிலான 'கிக் பாக்ஸிங்' போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 51 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தேனி மாவட்ட அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் ஏப்.,6ல் தேனி மாவட்ட அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடந்தது.
இப்போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 120 பேர் பங்கேற்றனர். இவர்களில் 51 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அமச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் தேனி மாவட்ட செயலாளர் துரைமுருகன் கூறியதாவது: ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் பிரிவில் தேனி மாவட்ட அளவில் 51 மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் மே 3, 4, 5 தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலை., மைதானத்தில், தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர் என்றார்.
மாநில போட்டிக்கு செல்லும் மாணவ மாணவிகளை தேனி மாவட்ட கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவர் மகாராஜன், தேனி மாவட்ட நடுவர்கள் நாகராஜ், ராம்குமார், செல்லப்பாண்டி, வீரபாண்டியன், தேனி லயன்ஸ் கிளப் பொருளாளர் ராஜமன்னார் ஆகியோர் வாழ்த்தினர்.