/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் தேனி கலெக்டர் உத்தரவு
/
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் தேனி கலெக்டர் உத்தரவு
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் தேனி கலெக்டர் உத்தரவு
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் தேனி கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 09, 2024 05:35 AM
கம்பம்: நகராட்சி பகுதிகளில் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் நடவடிக்கையை துவக்க கலெக்டரின் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
ஒராண்டிற்கும் மேலாக தேனி மாவட்டம் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை திடீரெனஅதிகரித்தது.
ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 200 தெருநாய்கள் உலா வந்தது. சாதாரண நாய்கள் மட்டுமின்றி வெறிநோய் பாதித்த நாய்களும் சுற்றித் திரிந்தன. நாய்கடியால் பாதித்து ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்தனர். தெருநாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன.
கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் கடந்தாண்டு ஒரு சில நகராட்சிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் மேற்கொண்டனர்.
ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த நடவடிக்கை முடங்கியது. மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரிக்க துவங்கியது.
இதனை தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் மீண்டும் நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சிகளில் அதற்கான பணிகளில் இறங்க முடிவு செய்துள்ளன.
சின்னமனூர் நகராட்சியில் 210 தெரு நாங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 50 தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்ய முடிவு செய்து அதற்கான மருந்து, ஊசிகள் வாங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமிஷனர் கோபிநாத், முதற்கட்டமாக எங்களது குப்பை கிடங்கு வளாகத்தில் கால்நடை டாக்டர்களை வைத்து 50 தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் பண்ண நடவடிக்கை எடுத்துள்ளோம்.
படிப்படியாக 210 நாய்களுக்கும் கருத்தடை பண்ண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.