/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வியாபாரிகளுக்கு போலீஸ் கண்டிப்பு பள்ளி,கல்லுாரி பகுதிகள் தீவிர கண்காணிப்பு

ADDED : ஆக 25, 2024 05:14 AM
கம்பம்: கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையில் சப்ளை எங்கிருந்து வருகிறது, அங்கு சென்று மொத்த வியாபாரிகளை கிடுக்கி பிடியில் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கம்பம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனை நடக்கிறது.
ஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, இப் பகுதியில் சில்லறை விற்பனைக்கும், கேரள வியாபாரிகளுக்கு சப்ளை செய்தனர்.
கம்பத்தில் கிலோ ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்படும் கஞ்சா, கேரளா எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூரில் கிலோ ரூ.50 ஆயிரம் விலை கிடைக்கும்.
எனவே கேரளாவில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை மூளைச்சலவை செய்து, கஞ்சாவை கம்பத்தில் இருந்து வாங்கி வர கேரியர்களாக பயன்படுத்துகின்றனர்.
இது நாள் வரை கஞ்சா வழக்குகளில் கைது, பறிமுதல் வழக்குகள் என நடந்தது.
தேனி எஸ்.பி. யாக சிவப்பிரசாத் பொறுப்பேற்ற பின், கம்பத்திற்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது, இதன் மொத்த வியாபாரிகள் யார் என கண்டறிந்து அவர்களை கைது செய்ய என்று உத்தரவிட்டார்.
இதற்கென எஸ்.ஐ. கதிரேசன் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்கள் ஆந்திராவில் முகாமிட்டு தமிழகத்திற்கு கஞ்சா விற்ற பலரை கைது செய்துள்ளனர்.
உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேல் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பதில் தீவிரம் காட்டி கடந்த 2 மாதங்களில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கென 'இன்பார்மர்கள்' நியமித்து 24 மணி நேரமும் கஞ்சா விற்பனை செய்வோரின் நடமாட்டம், பள்ளி, கல்லூரி அருகே நடமாடும் சந்தேக நபர்கள் குறித்து மப்டி உடையில் போலீசார் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அப்பகுதி கடைகளின் மீது தனிக்கவனம் செலுத்துகின்றனர். சில்லறை வியாபாரிகளையும் கைது செய்து தண்டனை பெற்று தர தீவிரம் காட்டப்படுகிறது.
இதன் மூலம் கம்பம் பகுதியில் கஞ்சாவை முழுவதும் ஒழிக்க போலீசார் கிடுக்கி பிடி நடவடிக்கை துவக்கி உள்ளனர்.