/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மன அழுத்த போலீசார் தயக்கம் இன்றி ஆலோசனை பெறலாம்: தேனி ஏ.டி.எஸ்.பி., ஆலோசனை

ADDED : மே 31, 2024 06:31 AM
தேனி : மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலீசார் காவலர் குடும்ப நல மையத்தில் தயக்கம் இன்றி சிகிச்சை ஆலோசனை பெற பதிவு செய்யலாம்' என ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தெரிவித்தார்.
தேனி மாவட்ட காவலர் குடும்ப நல மையம், செல்லமுத்து பவுண்டேசன் அறக்கட்டளை இணைந்து காவலர்கள் மகிழ்ச்சியாக பணிகளை மேற்கொள்வதற்காக ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமை வகித்தார். தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், ஆயுதபடை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், மன அழுத்தம் போக்கும் பயிற்சி பெற்ற எஸ்.ஐ.,க்கள் மலரம்மாள், பிருந்தா பேசினர். 148 போலீசார் பங்கேற்றனர்.
ஏ.டி.எஸ்.பி., பேசுகையில், பணிசுமை, குடும்ப பிரச்னை, நிதி பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் போலீசார் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு துாண்டப்படுவது அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 450 பேர் இறந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளன. இதனை தவிர்க்க டி.ஜி.பி., உத்தரவில் ஆலோசனை தேவைப்படுவோருக்கு ஆலோசனை, சிகிச்சை அளிக்க காவலர் குடும்ப நல மையம் தயாராக உள்ளது. அதீத மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு போலீசார் மகிழ்ச்சியுடன் பணியாற்றலாம். ஆலோசனை பெற பாதிப்பில் உள்ள போலீசார், நேரடியாக மையத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்.' என்றார்.