ADDED : மே 09, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இந்நிகழ்விற்கு தேனி கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
கல்லுாரிச் செயலாளர் தாமோதரன், பொருளாளர் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை, விளையாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகள் பற்றி கல்லுாரி செயலாளர் தாமோதரன் தெரிவித்தார். மாணவர்கள் சேர்க்கை கல்லுாரி வளாகம், தேனி கம்மவார் சங்க பப்ளிக் பள்ளியிலும் நடந்து வருகிறது.