ADDED : ஏப் 24, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் அனுப்பிரியா, ஆஸ்மி, கீர்த்தனா, நாகசக்தி, பாண்டிசெல்வி, சுருதி, வேங்கைமணி, ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் உத்தமபாளையத்தில் உள்ள தோட்டங்களில் தங்கி களபயிற்சி மேற்கொண்டனர்.
தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக புவி தினம், தேனீ வளர்ப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

