/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காடுகள், வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு தேவை பள்ளி விழாவில் மாவட்ட வன அலுவலர் பேச்சு

ADDED : ஜூலை 02, 2024 06:31 AM

கம்பம் : 'காடுகள், அதன் முக்கியத்துவம் குறித்த மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.' என பள்ளி விழாவில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா பேசினார்.
கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் தின நிறைவு விழா ஜூன் 21ல் துவங்கி கடந்த மாதம் வரை நிகழ்ச்சி நடந்தது.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு நிர்வாக குழு தலைவர் சௌந்தரராசன் தலைமை வகித்தார். தென் பிராந்திய கப்பற்படை தணிக்கை துறை இணை ஆணையர் ராம்ஜெயந்த் முன்னிலை வகித்தார். தாளாளர் கவிதா வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் சமர்த்தா பேசியதாவது:
சர்வதேச நாடுகள் மத்தியில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் காற்றின் மாசு அதிகரித்து மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பார்லர்களை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் இருக்கும் காடுகளை பாதுகாக்க வேண்டும். காடுகள், அதன் முக்கியத்துவம், சுற்றுப்புறச் சூழலில் அதன் பங்கு, வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் ஒரு மரமாவது நட்டு வளர்க்க வேண்டும்.', என்றார்.
ஏற்பாடுகளை முதுநிலை முதல்வர் சுவத்திகா, முதல்வர் கயல்விழி செய்திருந்தனர்.