/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
‛'ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சியில் உயர்கல்விக்கான ஆலோசனை சந்தேகங்களுக்கு தீர்வு பெற்ற மாணவர்கள்

ADDED : மே 04, 2024 05:47 AM

தேனி: தேனியில் தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள், இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கைக்கான உயர்கல்வி ஆலோசனை வழங்கும் 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வங்கி மேலாண்மை துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஸ்கூல் ஆப் அனிமேஷன் அண்டு மீடியா ஸ்டடீஸ் படிப்புகள் குறித்து துறைத் தலைவர் கிஷோர்குமாரும், பி.காம்., வித் பேங்கிங் இன்சூரன்ஸ் பாடத்திட்டம், வேலை வாய்ப்பு பற்றி பேராசிரியை பத்மாவதி பேசினர்.
பி.பி.ஏ., பாடத்திட்டம் குறித்து துறைத் தலைவர் குமரன்தாயுமாணவன், பி.காம்., ஹானர்ஸ், பி.காம்., ஹானர்ஸ் வித் ஏ.சி.சி.ஏ., படிப்பின் வேலை வாய்ப்பு பற்றி துறைத் தலைவர் ரவிச்சந்திரன் பேசினார்.
பி.எஸ்சி., உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல் பாடத்திட்டம், வேலை வாய்ப்புகள் குறித்து துறைத் தலைவர் பவித்ராகிருஷ்ணன், பி.எஸ்சி., மெரைன் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் குறித்து உதவி பேராசிரியர் ஆனந்த், கணினி அறிவியல் நெட்ஒர்க்கிங் படிப்பு குறித்து துறைத் தலைவர் முத்துகணேசன், பயர் அண்டு இன்டஸ்ட்ரியல் சேப்டி படிப்புகள் குறித்து துணை பேராசிரியர் சுதர்சன் பேசினர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விபர கையேடுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் சந்தேகங்களுக்கும் துறை தலைவர்கள், முதல்வர் இணைந்து விளக்கம் அளித்தனர்.