/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மானாவாரி நிலங்களுக்கு மானியம் தெளிவில்லாத உத்தரவால் புலம்பல்
/
மானாவாரி நிலங்களுக்கு மானியம் தெளிவில்லாத உத்தரவால் புலம்பல்
மானாவாரி நிலங்களுக்கு மானியம் தெளிவில்லாத உத்தரவால் புலம்பல்
மானாவாரி நிலங்களுக்கு மானியம் தெளிவில்லாத உத்தரவால் புலம்பல்
ADDED : ஜூலை 04, 2024 01:55 AM
உத்தமபாளையம்: மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1200 மானியம் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தெளிவில்லாமல் இருப்பதால் வேளாண் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.1200 வழங்க வேளாண் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களுக்கு சராசரியாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 150 ஏக்கரிலிருந்து 500 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு இந்த மானியம் அனுமதிக்கப்படுகிறது. இதுபற்றி உதவி இயக்குனர்கள் விவசாயிகளுக்கு அறிவிப்பு செய்யாமல் உள்ளனர். இது தொடர்பாக வேளாண் அலுவலர்கள் கூறுகையில், மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1200 வழங்க கூறி உள்ளனர் .
உழவு செய்வதற்கு ரூ.500. விதைகள் வாங்க ரூ 700 என கூறி உள்ளனர். ஒரு ஏக்கருக்கு கம்பு என்றால் 6 கிலோ தேவைப் படும். கிலோ ரூ.50. ஆறு கிலோவிற்கு ரூ.300 போக, மீதமுள்ள ரூ.400 ஐ என்ன செய்வது என கூறவில்லை.
மீதமுள்ள பணத்தை பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்துவதா என்பதில் சரியான உத்தரவு இல்லை. கம்பு சோளம், மக்காச் சோளம் மட்டுமே விதைப்பு செய்வார்கள். இதில் மக்காச்சோளம் என்றால் ஒரளவிற்கு சரியாக இருக்கும், ஆனால் கம்பு சோளம் என்றால் மீதம் இருக்கும்.
மீதமுள்ள பணத்தை என்ன செய்வதென்று கூறவில்லை. தற்போது வேளாண் குடோன்களில் கம்பு மட்டுமே உள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். மாவட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்த பின் தான் பணிகளை துவக்க வேண்டும் என்கின்றனர்.