/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் ரோட்டில் மின்வெட்டால் அவதி
/
பெரியகுளம் ரோட்டில் மின்வெட்டால் அவதி
ADDED : செப் 02, 2024 12:15 AM
தேனி : தேனி பெரியகுளம் ரோட்டில் கோட்டைகளம் ரோடு, உழவர்சந்தை, ஸ்ரீராம் நகர், நியூ ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக காலையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டாக உள்ளது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தேனி- பெரியகுளம் ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்திற்கு இடையூறான மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் மரங்கள் மின் ஒயர்களில் விழுவதை தவிர்க்க சில நேரங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. தேனி துணை மின் நிலையத்தில் ஏற்படும் பழுதுகளாலும் மின் வெட்டு ஏற்படுகிறது. விரைவில் சரிசெய்யப்படும்.', என்றனர்.