நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : கம்பம் அணைப்பட்டியை சேர்ந்தவர் விஷ்வா 28. தனியார் பள்ளியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேணுகாதேவி 26. இருவருக்கும் திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. வளைகாப்பிற்காக ரேணுகாதேவி போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். விஷ்வா அதிககடன் வாங்கி செலவு செய்ததை மனைவி ரேணுகாதேவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த விஷ்வா மாமியார் வீட்டிற்கு வந்து விஷம் குடித்துள்ளார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

