ADDED : ஜூன் 27, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஜூன் 28-
பெரியகுளம் ஒன்றியம் ஏ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் 70. இவரது மனைவி சரஸ்வதி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். கனகராஜ் சர்க்கரை,ரத்த கொதிப்பிற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
