ADDED : மே 03, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் இலவச கோடைகால பயிற்சி நடத்தப்படுகிறது.
இப்பயிற்சியின் துவக்க விழா பழனிசெட்டிப்பட்டி இந்து நாடார் உறவின்முறை ஆர்.எஸ்., நர்சரி அண்டு பிரைமரி பள்ளியில் நடந்தது. பள்ளி செயலாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். பொருளாளர் பாண்டி, செயற்குழு உறுப்பினர் ஜவஹர் முன்னிலை வகித்தனர். ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் சுகுமார் வரவேற்றார். பயிற்சி வகுப்புகள் மே 10 வரைநடக்கிறது.
துவக்க விழாவில் கலை ஆசிரியைகள் ராஜலட்சுமி, நாகலட்சுமி, ஆசிரியர் தனுஷ்கோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.